தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி ( தன்னாட்சி ). பெரம்பலூர். இலவச கண் பரிசோதனை முகாம் 13.10.2023 அன்று தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மேக்ஸிவிசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நமது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாம் நமது கல்லூரி முதல்வர் முனைவர். M. ஜெயந்தி மற்றும் துணை முதல்வர் முனைவர். S. சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் ஆரம்பித்த இம்முகாமில் நமது கல்லூரியில் உள்ள பல்வேறு துறை சார்ந்த துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் 750 ற்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனையில் பல்வேறு சந்தேகங்களை தெளிவுப் படுத்திக் கொண்டு பயணடைந்தனர். இம்முகாமில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் உதவி பேராசிரியர் வில்லவனம், முனைவர் தேவகி, முனைவர் ஜீவானந்தம், உதவி பேராசிரியர் சிவப்பிரகாஷ் ஆகியோர் மிக சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி சென்றனர்.