தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் ( உயர் கல்வித்துறை , தமிழ்நாடு அரசு ) , மற்றும் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி( தன்னாட்சி) இணைந்து நடத்தும் "இளம் மாணவ விஞ்ஞானி திட்டம்".
பங்கு பெறுவோர்: பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட 9-ம் வகுப்பு மாணவ மாணவிகள்.#THRCNEWS: இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா (YSSP) தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியும்,தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும் இணைந்து நடத்தும் ,இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகளுக்கான 15 நாட்கள் பயிற்சி வகுப்புத் தொடக்க விழா (YSSP)கல்லூரி வளாக குளிர்மை அரங்கில் 25.05.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட அளவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,மதிப்பெண் அடிப்படையில் ,தலைமை ஆசிரியரால் தேர்வு செய்யப்பட்ட, ஒன்பதாம் வகுப்பு பயிலும் 80 மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர்.இப்பயிற்சி வகுப்பு 25.05.2022 முதல் 08.06.2022 வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெற உள்ளது . இத்தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினராக ,திருச்சிராப்பள்ளி ,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கடல் சார் அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், முனைவர் ஆர்த்தர் ஜேம்ஸ் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.அவர் தனது சிறப்புரையில் ,”மாணவர்கள் தங்களது நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பதை இளம் வயதிலேயே தீர்மானிப்பதோடு,அதை செயல்படுத்த வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெரியவர்கள் சொல்வதை கேட்டு,அதன்படி பயணித்தாலே வெற்றி நிச்சயம் என்பதையும் வலியுறுத்தினார். இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக்குழுமத்தின் தாளாளர் செவாலியர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.துணை முதல்வர் முனைவர் அ.மகேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.உதவிப்பேராசிரியர் முனைவர் க. அ.ஜெயந்தி நன்றி கூறினார். இப்பயிற்சிக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களும்,இதர பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.15 நாட்கள் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இப்பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை, உதவிப்பேராசிரியர்கள் ராஜா, விவேக், பாசித் ஆகியோர் செய்திருந்தனர். உதவிப்பேராசிரியர் முனைவர் மு.முத்துமாறன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். Valedictory Ceremony (YSSP) Thanthai Hans Roever College (Autonomous) and Tamil Nadu State Council for Science and Technology jointly organized 15 days Young Student Scientists training program and it's valedictory ceremony was held on 08.06.2022 at 10.30 am at the College's AVE Hall. 80 students from Class IX selected by the concern headmaster on the basis of marks of government and government aided schools at Perambalur and Ariyalur districts attended the training program. The training program is scheduled to be held for a total of 15 days from 25.05.2022 to 08.06.2022. Mr. R. Arivazhagan, Chief Education Officer, Perambalur District was the special guest of the ceremony. In his speech, he said that "time is better than gold" and advised the students to possess self-confidence. The event was presided over by Dr. K. Varadharaajen, Founder-Chairman, Roever Group of Institutions. Mr.John Ashok Varadharajan, Vice-Chairman, Roever Group of Institutions delivered the presidential address. He insisted that Self-confidence is very important and we would not be able to survive without science and technology. He also stressed that we need to use science, which offers a lot of facilities, in the right direction. The Principal, Dr. M. Jayanthi, welcomed the gathering. The Vice Principal, Dr. A.Mahendiran offered felicitations. Students shared their feedback on what they learned during the training and how it was useful to them. Certificates were awarded to students who participated in the training program. Science models made by the students were kept on display. Prizes were awarded to the team that won the first three prizes Students were provided with notebooks and other materials required for the training program. Accommodation was arranged for 15 days. Arrangements for the training program were made by Co-coordinators, Dr.K.A.Jeyanthi, Mr.V.Raja, Mr.U.Vivek and Mr.Basith. Mr.V.Raja, Assistant Professor of Physics proposed Vote of thanks and Muthumaran, Assistant Professor of Tamil hosted the program.