தமிழும் இயற்கை வேளாண்மையும் ( மாணவர் ஆதரவு நிகழ்ச்சி ). தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி -பெரம்பலூர் தமிழாய்வுத்துறை மாணவர் ஆதரவு நிகழ்ச்சி-தமிழும் இயற்கை வேளாண்மையும் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின்,முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையின் மாணவர் ஆதரவு நிகழ்வின் கீழ் 'தமிழும் இயற்கை வேளாண்மையும்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 25.08.2022 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் கல்லூரி வளாக குளிர்மை அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர், செந்தமிழ் இயற்கைப் பண்ணையின் நிறுவனர் மற்றும் இயற்கை வேளாண்மையின் ஆர்வலர் திரு.ஆ.போதி பகவன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது சிறப்புரையில்,தமிழும் இயற்கை வேளாண்மையும் என்றும் பிரிக்க இயலாது. செயற்கை வேளாண்மை இருந்தாலேயே இயற்கை வேளாண்மை என்ற சொல் உருவானது.இயற்கை வேளாண்மையை உலகுக்கு தந்தது தமிழ் இனமே. செயற்கை உரங்கள் மண்ணைப் பாழ்ப்படுத்தும்.திருக்குறள் கூறும் மழையும்,வேளாண்மையும்தான் இயற்கை விவசாயத்தின் முன்னோடி என்பதை எடுத்துக்காட்டினார். இவ்விழாவிற்கு ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.துணை முதல்வர் முனைவர் அ.மகேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.தமிழாய்வுத்துறையின் தலைவர் முனைவர் க.செந்தில்ராஜா அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்.உதவிப்பேராசிரியர் திரு.தேவர் செல்வம் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார்.முதுகலை இரண்டாமாண்டு மாணவி சினேகா நிகழ்வைத் தொகுத்தும் நன்றியுரையையும் நல்கினார். இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட இலக்கிய மற்றும்,பிற துறை மாணவர்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறையின் பேராசிரியர்களும்,மாணவர்களும் செய்திருந்தனர்.