9750970183 office@roevercollege.ac.in
9750970183 office@roevercollege.ac.in

THANTHAI HANS ROEVER COLLEGE (AUTONOMOUS)

(Affiliated to Bharathidasan University)

Accredited with ‘A’Grade by NAAC (3rd cycle) with CGPA 3.23 out of 4

ELAMBALUR (P.O), PERAMBALUR – 621 220

thanthai-hans-roever
thanthai-hans-roever
thanthai-hans-roever

தமிழாய்வுத்துறை

event image

30/Aug/2024 - 30/Aug/2024
Tamil

தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி -பெரம்பலூர்

தமிழாய்வுத்துறை

இலக்கிய மன்றத் தொடக்க விழா

தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின்,முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையின் சார்பாக, இலக்கிய மன்ற விழா 30.08.2024 அன்று நண்பகல் 12.00 மணியளவில் கல்லூரி வளாக ஒளி-ஒலி அரங்கத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையின் தலைவர், இணைப் பேராசிரியர் முனைவர் கோ. சந்தன மாரியம்மாள் அவர்கள் கலந்துகொண்டு 'இலக்கியமும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அவர் தனது சிறப்புரையில்,வாழ்வு என்பதே விமர்சனம். வெளிப்படுத்துவதே வாழ்க்கை என்ற மேத்யூ அர்னால்டு அவர்களின் கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்ததோடு,சங்க காலம் முதல் புதுக்கவிதை வரை இலக்கியங்கள் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதை ஜனரஞ்சகமாகவும் பல்வேறு உதாரணங்களோடும் விளக்கினார்.இலக்கியங்களின் பல்வேறு சுவையான இடங்களைப் பாடல்களின் மூலம் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவ்விழாவிற்கு ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். துணைத் தாளாளர் திரு ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலைப்புல முதன்மையர் முனைவர் K.மருததுரை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.தமிழாய்வுத்துறையின் தலைவர் பேராசிரியர் திரு.ம.தேவர் செல்வம் அவர்கள் மதிப்புரை நிகழ்த்தினார். உதவிப் பேராசிரியர் முனைவர் த. ரம்யா அவர்கள் வரவேற்புரையை நல்கினார். இளநிலை மூன்றாமாண்டு மாணவி காருண்யா நன்றி நல்கினார்.முதுகலை முதலாமாண்டு மாணவர் பா. சுரேந்திரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட இலக்கிய மாணவர்களும்,பிற துறை மாணவர்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இலக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. செந்தில்நாதன் அவர்களும் மற்றும் தமிழாய்வுத்துறையின் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.