தமிழாய்வுத்துறை நடத்தும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ... தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரியில் உள்ள தமிழாய்வுத் துறையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (26-08-2025) நண்பகல் 10.30 மணியளவில் நடைப்பெற்றது . ரோவர் கல்விக் குழுமங்களின் தாளார் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முதுமுனைவர் க.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் முனைவர் சீ.சிவக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மொழிப்புல முதன்மையர் முனைவர் க.தமிழ்மாறன் அவர்கள் திருக்குறளின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு குறித்தும் சிறப்புரையாற்றினார் . தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர்சே.சுரேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தமிழாய்வுத்துறையின் பேராசிரியர்கள் முனைவர் ம.அகதா அவர்களும்,முனைவர் த.மகேஸ்வரி அவர்களும் நடுவராக பங்கேற்றனர். இந்நிகழ்வில் 30 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சி.ராஜலெட்சுமி இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார் .