9750970183 office@roevercollege.ac.in
9750970183 office@roevercollege.ac.in

THANTHAI HANS ROEVER COLLEGE (AUTONOMOUS)

(Affiliated to Bharathidasan University)

Accredited with ‘A’Grade by NAAC (3rd cycle) with CGPA 3.23 out of 4

ELAMBALUR (P.O), PERAMBALUR – 621 220

thanthai-hans-roever
thanthai-hans-roever
thanthai-hans-roever

தமிழாய்வுத்துறை

event image

15/Sep/2025 - 21/Sep/2025

தந்தை ஹேன்ஸ் ரோவர்  கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர்.   தமிழாய்வுத்துறை சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி( Faculty Development Program)நடைபெற்றது.   தந்தை ஹேன்ஸ் ரோவர்  கல்லூரி(தன்னாட்சி)  தமிழாய்வுத்துறை   சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி( Faculty Development Program)நடைபெற்றது. இந்நிகழ்வு   15.09. 2025 முதல் 21.09.2025 வரை இரவு 7.00 - 8.00 மணி வரை இணைய தளம் வழியாக YouTube - ல் நடைபெற்றது.  ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் k. வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் முது முனைவர் K.ரவிச்சந்திரன் அவர்கள் பயிற்சியை தொடங்கி வைத்தார்கள். துணை முதல்வர்  முனைவர் S. சிவகுமார் அவர்கள்  வாழ்த்துரை வழங்கினார். கலை புல முதன்மையர் முனைவர் K. மருததுரை, அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன், மொழிகள் புல முதன்மையர் முனைவர் க. தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ் ஆய்வு துறையின் துறை தலைவர் முனைவர் சே சுரேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிற்சியின் தொடக்கமாக ஆய்வு அணுகுமுறைகள் என்னும் தலைப்பில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,மொழிப்புல முதன்மையர் முனைவர் க.தமிழ்மாறன் அவர்கள் கருத்துரை வழங்கினார். சென்னை ராணி மேரி கல்லூரி இணை பேராசிரியர் முனைவர் கே. இரா.கமலா முருகன் அவர்கள் அழகியல் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். மைசூர், இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் இளநிலை வள நபர் LDCIL ,முனைவர் எஸ். காமராஜர் அவர்கள் ஒப்பிடு அணுகுமுறைகள் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கேரளா,பாலக்காடு, அரசு விக்டோரியா கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முனைவர் பா. உமாராணி அவர்கள் உளவியல் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கத்தார்,பிர்லா பொது பள்ளி ,தமிழ் துறை தலைவர், முது முனைவர் சோ.கிருஷ்ணமூர்த்தி  அவர்கள் மானுடவியல் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். வேப்பந்தட்டை அரசு மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ  விரிவுரையாளர் முனைவர் மு . முத்துமாறன் அவர்கள் நவீனத்துவம் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். சென்னை,ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி , உதவி பேராசிரியர், முது முனைவர் சு. அம்பிகாவதி அவர்கள் பெண்ணியம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பங்கேற்பாளர்களின் வினாக்களும் கருத்துரையாளர்களின் வினாக்களும் இடம்பெற்று ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி சிறப்புற  நிறைவுப்பெற்றது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அனைத்து பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் 140 பேர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தற்கால தமிழில் ஆய்வுகளின் போக்கும் வளர்ச்சியும் குறித்த சிறந்த பயிற்சியாக ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி அமைந்திருந்தது.  இந்நிகழ்வை தமிழ் ஆய்வு துறையின் உதவி பேராசிரியர் முனைவர்  த.மகேஸ்வரி அவர்கள்  ஒருங்கிணைத்தார்.