தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி பெரம்பலூர் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியில் 8,9,10.11.2023 ஆகிய மூன்று நாட்களும் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் இளங்கலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு பயிலும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்குப் பாடரீதியாக பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள், கடந்த பருவத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.மாணவர்கள் நலன் நோக்கிய அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும்,மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் விரிவாகக் கூறினார்.துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் மாணவர்களது மதிப்பெண்கள், வருகைப் பதிவு, திட்டக் கட்டுரைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பெற்றோர்களுக்குத் தெளிவாகத் தெரிவித்தார். மேலும் மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளில் பெற்றோர்களின் பங்கு குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக்குழுமங்களின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.துணைத் தாளாளர் திரு.ஜான் அசோக் வரதராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி மற்றும் துணை முதல்வர் முனைவர் S.சிவகுமார், பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் 300 பேர் கலந்துகொண்டனர்.