தந்தை ஹேன்ஸ் ரோவர் (தன்னாட்சி) கல்லூரி - பெரம்பலூர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டின் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வழி காட்டுதல் நிகழ்ச்சி 17.07.2023 முதல் 21.07.2023 வரை கல்லூரி வளாக ஒலி - ஒளி அரங்கத்தில் நடைபெற்றது. ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பான ஆளுமைகள் கலந்துகொண்டு தங்களது கருத்துரைகளை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டனர். தமிழ்நாடு இளநிலை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ,ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் திரு.K.மகேந்திரன் அவர்கள் ‘வெற்றியின் ஆயுதம் புத்தகங்களே என்ற தலைப்பிலும்,அரியலூர், அரசு கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் க.தமிழ்மாறன் அவர்கள் ‘வெல்வோம் வா’ என்ற தலைப்பிலும், பெரம்பலூர் மனவளக்கலை மன்றத்தைச் சார்ந்த பேராசிரியர் A.அண்ணாதுரை ‘இளமையைப் பயன்படுத்து’ என்ற தலைப்பிலும், திருச்சிராப்பள்ளி ஆத்மா மருத்துவமனையின் திட்ட அலுவலர் திரு J.கரன் லூயிஸ் அவர்கள், ’மன நிலைக்கான நேர்மறை சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும், பெரம்பலூர் மெஜல் & மெஜல் அகாதமியின் இயக்குனர் அவர்கள், ‘ஆங்கிலமே வெற்றிக்கான சாவி ‘ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி அவர்கள், கல்லூரியின் விதிமுறைகள் பற்றியும், இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கான காரணங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரியின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு அமைப்பின் செயல்பாடுகளை அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுமதி பிராங்கிளின் அவர்களும், தொட்டுவிடும் தூரத்தில் தான் வானம் என்னும் தலைப்பில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் செந்தில்நாதன் அவர்களும், 'இளமையே சாதிக்கலாம் வா' என்ற தலைப்பில் முனைவர் சுரேஷ் அவர்களும், மாணவர்கள் தங்களுக்கான திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி என்ற தலைப்பில் கல்லூரியின் மாணவர் சேர்க்கை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரவி அவர்களும் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் கல்லூரியில் இயங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான பல்வேறு அமைப்புகளைப் பற்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். குறிப்பாக நாட்டு நலப்பணி திட்டத்தைப் பற்றி அந்த அமைப்பின் திட்ட அலுவலர் U.விவேக் அவர்களும், தேசிய மாணவர் படை பற்றிய விவரங்களை அந்த அமைப்பின் திட்ட அலுவலர் P.பிரவீன் பெருமாள் அவர்களும், கலைப் பண்பாட்டு நிகழ்வுகள் பற்றி நிகழ்த்துக்கலைத் துறையின் தலைவர் முனைவர் மருததுரை அவர்களும், கல்லூரியின் விளையாட்டு செயல்பாடுகளைப் பற்றி உடற்கல்வித்துறை தலைவர் முனைவர் J.கண்ணன் அவர்களும், மேலும் கல்லூரியின் பல்வேறு அமைப்புகள் சார்ந்த விவரங்களை வணிக மேலாண்மையியல் துறையின் உதவிப்பேராசிரியர் B.நிஷாந்தினி அவர்களும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வின் நிறைவு விழாவில் ரோவர் கல்விக்குழுமங்களின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். துணை முதல்வரும்,அறிவியல் புல முதன்மையருமான முனைவர் S. சிவக்குமார் அவர்கள் நன்றி நல்கினார்.கலையியல் புல முதன்மையர் முனைவர் பிரியா அவர்களும் கலந்துகொண்டார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முதல்வர், துணை முதல்வர் துறைத்தலைவர்கள்,பேராசிரியப் பெருமக்கள் செய்திருந்தனர்.