9750970183 office@roevercollege.ac.in
9750970183 office@roevercollege.ac.in

THANTHAI HANS ROEVER COLLEGE (AUTONOMOUS)

(Affiliated to Bharathidasan University)

Accredited with ‘A’Grade by NAAC (3rd cycle) with CGPA 3.23 out of 4

ELAMBALUR (P.O), PERAMBALUR – 621 220

thanthai-hans-roever
thanthai-hans-roever
thanthai-hans-roever

Blood Donation Camp organized by YRC, NSS, NCC, Rotaract Club

event image

09/Sep/2024 - 09/Sep/2024

தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி

பெரம்பலூர்

செஞ்சிலுவை சங்கம்,

நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய தன்னார்வ இரத்ததான முகாம்-2024 தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம்,தேசிய மாணவர் படை, ரோட்டரி சங்கம் ஆகிய அமைப்புகள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையுடன்  இணைந்து 09.09.2024, திங்கள் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாக ஒளி, ஒலி  அரங்கில் தன்னார்வ இரத்ததான முகாமை  நடத்தின. இந்த முகாமிற்கு தந்தை ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர்   டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை ஏற்றார். துணைத் தாளாளர்  திரு.ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ஸ்ரீ.சிவக்குமார் அவர்கள் முன்னிலை  வகித்தார்.  சிறப்பு அழைப்பாளர்களாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை (குருதி வங்கி) மருத்துவர் V.சத்யா அவர்களும் எளம்பலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களும் பங்கு கொண்டனர். இந்த முகாமில்  கலைப்புல முதன்மையர் முனைவர் க.மருததுரை அவர்களும், அறிவியல் புல முதன்மையர்  முனைவர் சு. மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு இரத்தக்கொடை வழங்கும் மாணவர்களை ஊக்குவித்தனர். இந்நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறையைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்களும்,பேராசிரியர்களும் தொண்டு உள்ளதோடு பங்குகொண்டு குருதி வழங்கி சிறப்பித்தனர். இந்தமுகாமை  கல்லூரியின்  செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் வீ.தனலட்சுமி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் உதவிப்பேராசிரியர் வில்லவனம், முனைவர் மு.தேவகி,  முனைவர் ஜீவானந்தம், முனைவர் பாசித், திரு.சிவப்பிரகாசம் ஆகியோரும், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் திரு.P.பிரவீன் பெருமாள் அவர்களும்  வழி நடத்தினர். இந்தமுகாமை  கல்லூரியின்  செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் வீ.தனலட்சுமி ஒருங்கிணைத்து நடத்தினார்.