Department of Bio-Sciences Organize "Bio Glitz - 2K24". தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர் உயிர் அறிவியல் துறைகள் (Bio Sciences) BIO GLITZ 2024 தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில், உயிர் அறிவியல் துறைகளின் சார்பில் மாநில அளவிலான BIO GLITZ 2024 என்ற நிகழ்வு 29.02.2024 அன்று கல்லூரி வளாக ஒலி ஒளி அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, பெரம்பலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.M.S.M வளவன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில், மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் தடைகளை தாண்டி எங்ஙனம் சாதிக்க வேண்டும் என்பது பற்றியும், மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டிய விஷயங்களை படிக்கும் காலத்திலேயே யோசித்து வைத்து கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தினார். அதைத்தொடர்ந்து மாநில அளவிலான பல்வேறு கல்லூரிகளிலிருந்து வருகை புரிந்த உயிர் அறிவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையிலான வினாடிவினா, அடுப்பில்லா சமையல், நினைவுத்திறன் போட்டி, தாவரங்களைப் புகைப்படம் எடுத்தல், விளம்பர மேடை, முக ஓவியப்போட்டி, அறிவியல் துறைக்கான வார்த்தை விளையாட்டு ஆகிய பல்வேறு திறன் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். துணைத் தாளாளர் திரு.ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. ஜெயந்தி அவர்களும் துணை முதல்வர் S. சிவகுமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். நுண்ணுயிரியல் துறை தலைவர் முனைவர் K.A ஜெயந்தி அவர்கள் வரவேற்பு நல்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறையின் உதவிப்பேராசிரியருமான முனைவர் V. கார்த்திகேயன் அவர்கள் நன்றி நல்கினார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 200 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். விழா நிகழ்வினை நுண்ணுயிரியல் துறை உதவிப்பேராசிரியர் J.நஸ்ரின் பேகம் அவர்கள் தொகுத்து வழங்கினார். விழாவின் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் நுண்ணுயிரியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் A.திருமுருகன் அவர்களும், மற்றும் அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்களும் செய்திருந்தனர்.