Department of Botany and Zoology Organizes a Guest Lecture on " Snake Bite and First Aid" & MoU Signing Ceremony. தந்தை ஹேன்ஸ் ரோவர் (தன்னாட்சி)கல்லூரி பெரம்பலூர் உயிர் அறிவியல் துறை (Department Of Life Science) நுண்ணுயியல் துறை,தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகள் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரியில் நுண்ணுயியல் ,தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளின் சார்பாக 26.09.2022 அன்று காலை 10.00 மணியளவில் சிறப்புச்சொற்பொழிவுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி , ஜமால் முகம்மது கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர்.N. ரீகானா அவர்கள் கலந்துகொண்டு 'சைனோ பாக்டீரியாவும்,அதன் பயன்களும் மற்றும் வேலைவாய்ப்புகளும்' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அவர் தனது சிறப்புரையில்,'சைனோ பாக்டீரியாவால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் அந்த துறையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்கான தகுதிகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தார். மற்றுமொரு சிறப்பு விருந்தினராக துறையூர் குளோபல் நேச்சுரல் சயின்ஸ் அமைப்பின் நிறுவரான முனைவர் நவீன் கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு 'பாம்புக்கடியும் அதன் முதல் உதவிகளும்'என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.அவர் தனது சிறப்புரையில் பல்வேறு பாம்புகளின் விஷத்தன்மை களைப் பற்றியும்,கடித்த பின்பு அதற்கான முதல் உதவிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.க்ளோபல் நேச்சுரல் சயின்ஸ் நிறுவனமும் கல்லூரியின் உயிர் அறிவியல் துறைகளும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கினார்.கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.துணை முதல்வர் முனைவர் அ.மகேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வை நுண்ணுயியல் துறைத்தலைவர் முனைவர் K.A.ஜெயந்தி அவர்களும்,விலங்கியல் மற்றும் தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் A. ராஜேஷ் அவர்களும் மற்றும் அத்துறைகளின் உதவிப்பேராசிரியர்களும் ஒருங்கிணைந்து செய்தனர். இந்நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்