Department of Computer Applications organizes a seminar on "Latest Trends in Technology". தந்தை ஹேன்ஸ் ரோவர் (தன்னாட்சி)கல்லூரி –பெரம்பலூர் கணினி பயன்பாட்டியல் துறையின் சிறப்புக் கருத்தரங்கம் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறையின் சார்பாக,ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம் 'கணினித் துறையில் இன்றைய நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி' என்னும் தலைப்பில் 04.08.2023 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் கல்லூரி வளாக ஒளி ,ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு ரோவர் கல்விக் குழுமங்களின் மேலாண் தலைவர் டாக்டர்.கி.வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கினார்.துணை மேலாண் தலைவர் திரு.வ.ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக,திருச்சிராப்பள்ளி, காவேரி மகளிர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் முனைவர் M.பர்வீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது சிறப்புரையில், 'கணினித்தகவல் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது கடல் போல் இருக்கிறது. கற்றுக்கொள்ள வேண்டிய பருவம் மாணவப் பருவம் என்பதை வலியுறுத்தியதோடு புதிதாக வருகின்ற தொழில்நுட்பத்தினை மாணவர்கள் அந்தந்த கால கட்டத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்களும்,அறிவியல் புல முதன்மையரும், துணை முதல்வருமான முனைவர் S. சிவகுமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் V. பூங்கொடி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நன்றியுரையை கணினிப் பயன்பாட்டியல் துறையின் உதவிப்பேராசிரியர் திரு P. ராமனாதன் அவர்கள் நல்கினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் S.நடராஜன் அவர்களும்,கணினிப் பயன்பாட்டியல் துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குகொண்டு பயனடைந்தனர்.