Department of Computer Applications Organizes a seminar on " AI Medical Imaging".
தந்தை ஹேன்ஸ் ரோவர் (தன்னாட்சி)கல்லூரி –பெரம்பலூர்
கணினிப் பயன்பாட்டியல்
துறையின் ஒரு நாள் சிறப்புக்கருத்தரங்கம்
தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறையின் சார்பாக,ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம்,” மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம்" என்ற தலைப்பில் 27.02.2024 அன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி வளாக ஒளி ,ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு ரோவர் கல்விக் குழுமங்களின் மேலாண் தலைவர் டாக்டர்.கி.வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கினார்.துணை மேலாண் தலைவர் திரு.வ.ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் முகமது பயஸ் பாட்சா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது சிறப்புரையில், 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் மற்றும் வளர்ச்சி நிலையையும், மருத்துவத்துறையில் அதன் பங்கு , அதன் நிறை குறைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இறுதியாக மாணவர்கள் கேட்ட ஐயங்களைத் தெளிவுபடுத்தினார். முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்களும், துணை முதல்வர் முனைவர் S.சிவகுமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்புரையை கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் V.பூங்கொடி அவர்கள் வழங்கினார். நன்றியுரையை கணினிப் பயன்பாட்டியல் துறையின் உதவிப்பேராசிரியர் திரு.A. யோகேஷ் அவர்கள் நல்கினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கணினிப் பயன்பாட்டியல் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கருத்தரங்கத்தில் பங்குகொண்டு பயனடைந்தனர்.