Department of Computer Science & Information Technology organizes a Guest Lecture on " Cyber Security and Ethical Hacking Fundamentals". தந்தை ஹேன்ஸ் ரோவர் (தன்னாட்சி)கல்லூரி -பெரம்பலூர் கணினியியல் மற்றும் கணினித் தகவல் தொழில் நுட்பத் துறை -Cyber security and Ethical hacking fundamentals கருத்தரங்கம் நடைபெற்றது. தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் கணினியியல் மற்றும் கணினித் தகவல் தொழில் நுட்பத் துறையின் சார்பில் 'Cyber security and Ethical hacking fundamentals கருத்தரங்கம் 16.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் கல்லூரி வளாக ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர், முனைவர் S. சிவகுமார் அவர்களும், அறிவியல் துறையின் புலம் முதன்மையர் S. மணிமாறன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக Team Lead, Wipro technologies , Bangalore திரு.தர்மரசு கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் தகவல் தொழில் நுட்பத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். Cyber security , cyber Attacks பற்றியும், Net work security பற்றியும் தெரிந்து கொண்டு மாணவர்கள் தன்னைச் சுற்றியும் தன்னை சார்ந்தவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் புதிய செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். அதை சமுதாயத்திற்கு பயனுடையதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.அதற்கு மாணவர்கள் தங்களை தகுதி உடையவர்களாக மாற்றிக்கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வில் அத்துறையைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.