9750970183 office@roevercollege.ac.in
9750970183 office@roevercollege.ac.in

THANTHAI HANS ROEVER COLLEGE (AUTONOMOUS)

(Affiliated to Bharathidasan University)

Accredited with ‘A’Grade by NAAC (3rd cycle) with CGPA 3.23 out of 4

ELAMBALUR (P.O), PERAMBALUR – 621 220

thanthai-hans-roever
thanthai-hans-roever
thanthai-hans-roever

Department of Computer Science & Information Technology

event image

01/Oct/2024 - 01/Oct/2024
Computer Science
Seminar

Department of Computer Science & Information Technology Organizes a One Day Seminar on "Emerging IT Trends Driving the Future".  

தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி - பெரம்பலூர்

கணினியியல் & கணினி தொழில்நுட்பவியல் துறை

ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம்

  தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரியின் கணினியியல் & கணினி தொழில்நுட்பவியல் துறைகளின் சார்பாக ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம 'கணினி தொழில்நுட்பத்தில் எதிர்கால வளர்ந்து வரும் போக்குகள்' என்ற தலைப்பின் கீழ் 01.10.24 அன்று கல்லூரி வளாக ஒலி ஒளி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி .வரதராஜன் அவர்கள் தொடங்கி வைத்து தலைமையுரை வழங்கினார். இந்நிகழ்வில் , சென்னை,CTS கம்பெனியின் முதன்மை இயக்குனர் முனைவர் K விஸ்வநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  சிறப்பித்தார். அவர் தனது சிறப்புரையில், கணினி தொழில்நுட்பத்தில் திட்ட வரைவுகளை தயார் செய்யும் விதம் பற்றியும், அதற்கு காரணமான மென்பொருள்களை உருவாக்கும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரி (பொறுப்பு) முதல்வர் மற்றும் கணினி அறிவியல் & கணினி தொழில்நுட்பவியல் துறைத் தலைவருமான முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் திரு சேகர் அவர்களும் கணினித்துறை மற்றும் கணினித் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர். இக்கருத்தரங்கத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.