Department of Computer Science & Information Technology organizes an Association Inauguration "CERT - Club".
தந்தை ஹேன்ஸ் ரோவர் (தன்னாட்சி)கல்லூரி -பெரம்பலூர்
கணினியியல் மற்றும் கணினித் தகவல் தொழில் நுட்பத் துறை -CERT CLUB துவக்க விழா தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் கணினியியல் மற்றும் கணினித் தகவல் தொழில் நுட்பத் துறையின் சார்பில் 'CEIR CLUB' துவக்க விழா 02.08.2024 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாக ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கினார். கல்லூரியில் முதன்முதலாக தொடங்கப்பட்ட இந்த கிளப்பின் மாணவர் தலைவர் மற்றும் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்த கிளப்பிற்கான கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு அதனை மாணவர்கள் உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்களும்,துணை முதல்வர், முனைவர் S. சிவகுமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் அத்துறையைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தனர்.