தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி -பெரம்பலூர்
நிகழ்த்துக்கலைத்துறையும் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தும் பயிலரங்கம்
தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின்,நிகழ்த்துக்கலைத்துறையும் தமிழாய்வுத்துறையும் இணைந்து 'தெருக்கூத்தும் நிகழ்த்து முறைகளும்'என்ற தலைப்பின் கீழ் பயிலரங்கத்தினை 10.09.2024 அன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாக ஒளி-ஒலி அரங்கத்தில் சிறப்பாக நடத்தின.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஈரோடு ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் V.ராம் அவர்கள் கலந்துகொண்டு தெருக்கூத்தின் பல்வேறு அம்சங்களை எடுத்துக் கூறியதுடன் அதில் இடம்பெறும் பாடல்களின் தாள நயத்தை பல்வேறு உதாரணங்களுடன் மாணவர்களுக்குப் பாடிக் காண்பித்தார். ராமாயணம் மகாபாரதம், அரிச்சந்திர புராணம் போன்ற புராணங்களில் இடம்பெற்றுள்ள சில முக்கியக் கதாபாத்திரங்களை வேடமிட்டு நடித்துக் காட்டினார். தெருக்கூத்தினை மாணவர்கள் கற்றுக்கொண்டு அதனை அழியாத வகையில் காப்பாற்ற வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தினார். இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கினார். துணைத் தாளாளர் திரு ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலைப்புல முதன்மையரும், நிகழ்த்து கலைத்துறையின் தலைவருமான முனைவர் K.மருததுரை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.தமிழாய்வுத்துறையின் தலைவர் பேராசிரியர் திரு.ம.தேவர் செல்வம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இளங்கலை மூன்றாமாண்டு மாணவி ஜெயஸ்ரீ நன்றி நல்கினார்.முதுகலை முதலாமாண்டு மாணவர் பா. சுரேந்திரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட இலக்கிய மாணவர்களும்,பிற துறை மாணவர்களும் பங்குகொண்டு பயன் பெற்றனர். இப்பயிலரங்கத்திற்கான ஏற்பாடுகளை நிகழ்த்துக்கலைத் துறைத்தலைவர் முனைவர் K.மருததுரை அவர்களும், தமிழாய்வுத் துறையின் தலைவர் அவர்களும், தமிழாய்வுத்துறையின் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.