Yoga Centre, NSS & NCC jointly Organize " International Day of Yoga - 2024 ( Yoga for Self & Society)".
தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி பெரம்பலூர்
10ஆவது சர்வதேச யோகா தினம் 21.06.2024
தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியில் 10 ஆவது சர்வதேச யோகா தினம் யோகா மையம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு 21.06.2024 அன்று காலை 9.30 மணியளவில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக்குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். துணைத்தாளாளர் திரு ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். மு. ஜெயந்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.அவர் தனது வாழ்த்துரையில் 'உடல், மனம் ஆகியவற்றை யோகா எங்ஙனம் இணைக்கிறது என்பது பற்றி எடுத்துரைத்தார். கல்லூரியில் உள்ள யோகா மையத்தினை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பலன் பெற வேண்டும் என்றும், யோகப் பயிற்சிகளை முறையாக செய்து தனக்கும், சமூகத்திற்கும் நன்மை விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளவும் அறிவுறுத்தினார். துணை முதல்வர் முனைவர் .திரு. S. சிவகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். யோகா மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் கீதா அவர்கள் வரவேற்புரை நல்கினார். யோகா மைய உதவி ஒருங்கிணைப்பாளர் முனைவர் அனிதா அவர்கள் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு யோகப் பயிற்சிகளை பயிற்றுவித்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மற்றும் உடற்கல்வி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 200 க்கும் மேற்பட்டோர் யோகப் பயிற்சிகள் செய்தனர்.கல்லூரி லெப்டினண்ட் பிரவீன் பெருமாள் அவர்கள் நன்றியுரை நல்கினார். நிகழ்வை ஆங்கிலத்துறை பேராசிரியர் சுகுணா அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வில்லவனம், உடற்கல்வியியல் துறைத் தலைவர் முனைவர் கண்ணன் மற்றும் அலுவலக மேலாளர் பிரேம் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.