International Quality Assurance Cell Organized Faculty Development Program on Project Proposal Writing and Patent Drafting and Filling. தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி பெரம்பலூர் பேராசிரியர்களுக்கான சுய மேம்பாட்டுக் கருத்தரங்கம் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் , அகமதிப்பீட்டுத் தர வரிசை சீரமைப்பின்(IQAC) சார்பில் 04.10.2023 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பேராசிரியர்களுக்கான சுய மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வு 'குறுந்திட்ட முன்மொழிவு எழுதும் முறை அதற்கான காப்புரிமை வரைவு மற்றும் நிரப்புதல்' என்ற தலைப்பில் நடைபெற்றது. கருத்தரங்க சிறப்பு விருந்தினராக சென்னை,தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் செயலர் முனைவர் R. ஸ்ரீனிவாசன்அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது சிறப்புரையில்,'மாணவர்களை தொழில்நுட்பம் குறித்த ஆய்வு நோக்கி எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது பற்றியும், ஆய்வு திட்டங்களை எங்ஙனம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். சமீபத்திய சில ஆய்வுகளின் முன் உதாரணங்களையும் காட்டினார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், கடந்த ஆண்டு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உதவித்தொகை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் ரோவர் கல்விக்குழுமங்களின் மேலாண் தலைவர் டாக்டர் கி.வரதராஜன் ,துணை மேலாண் தலைவர் திரு.ஜான் அசோக் வரதராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி மற்றும் துணை முதல்வர் முனைவர் S.சிவக்குமார், உள்ளிட்ட பேராசிரியர்கள் 150 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றியதோடு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.IQAC யின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் J.A.A. ஜெரால்ட் அவர்கள் நன்றி நல்கினார். நிகழ்வின் தொடக்கமாக வேத வாசிப்பினை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சுமதி பிராங்கிளின் வழங்கினார்.இந்நிகழ்வினை ஆங்கிலத்துறைத் தலைவர் தமிழ் ரோஜா அவர்கள் தொகுத்து வழங்கினார். இக்கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை IQAC யின் உறுப்பினர்கள் செய்திருந்தனர்