தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி - பெரம்பலூர் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பும்,தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டமும் இணைந்து பட்டதாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை 26.06.2023 அன்று நடத்தியது.இம்முகாமில் தமிழக அளவிலான தொழில் நுட்ப சந்தை,கணினித் தொழில் நுட்பம் ,வங்கி, நிதி நிறுவனம், மனித வள மேம்பாடு போன்ற 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தன. இந்நிகழ்வில் ரோவர் கல்விக்குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்களும்,துணைத் தாளாளர் திரு. ஜான் அசோக் வரதராஜன் அவர்களும்,கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்களும்,கல்லூரியின் அறிவியல் புல முதன்மையரும், துணை முதல்வருமான முனைவர் திரு.S.சிவக்குமார் அவர்களும்,திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பின் திட்ட அலுவலர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முதல் சுற்று ஆளுமைத்திறனுக்கான சுற்றாக நடைபெற்றது .அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாம் சுற்றாக கலந்துரையாடல் நடைபெற்றது.இதிலிருந்து தேர்வு செய்யப்பட்டவருக்கு தனிநபருக்கான நேர்காணலும் நடைபெற்றது .இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.இதில் 36 பேருக்கு பணி வாய்ப்பிற்கான உறுதிக் கடிதமும்,112 பேருக்கு இரண்டாம் கட்ட தேர்விற்கான கடிதமும் வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சுமதி பிராங்கிளின்,துணை ஒருங்கிணைப்பாளர் திருமதி நிஷாந்தி,அலுவலக மேலாளர் திரு. பிரேம்குமார் ஆகியோரும் செய்திருந்தனர்.