National Service Scheme organizes the programme on " MY Bharat Yuva Portal Enrollment". பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவுறுத்தலின்படி நமது கல்லூரியில் பயிலும் அனைத்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை MYBharat India yuva Registration செய்வது தொடர்பாக நிகழ்ச்சி 08.12.2023 அன்று காலை 9.30 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின் இளையோர் அலுவலர் S.கீர்த்தனா அவர்கள் பங்குகொண்டு MYBharat yuva portal Enrolment அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வழிநடத்தினார். இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் கி. வரதராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் மற்றும் துணை முதல்வர் முனைவர் .S. சிவகுமார் அவர்கள் முன்னிலையில் 450 ற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் உதவிப்பேராசிரியர் கி.வில்லவனம், முனைவர் மு. தேவகி , முனைவர் க. ஜீவானந்தம்,உதவிப்பேராசிரியர் சிவப்பிரகாசம், செல்வி பெ.சுகாதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.