தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணி இன்று (18.12.2023) தமிழக அரசு அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளைவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. க. கற்பகம் அவர்கள் தொடங்கி வைத்தார். பேரணியில் பல்வேறு கல்லூரி கலந்து கொண்டனர் இதில் நமது தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் பயிலும் 75 ற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழி மற்றும் தமிழ் வளர்ச்சி மொழி குறித்து வாசகம் கையில் ஏந்தியப்படி சங்குப்பேட்டை வழியாக வட்டாச்சியர் அலுவலகம் வரை பேரணி சிறப்பாக நடைபெற்றது. நமது கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் மற்றும் துணை முதல்வர் முனைவர் .S. சிவக்குமார் அவர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கி மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் உதவிப்பேராசிரியர் கி.வில்லவனம், முனைவர் மு. தேவகி , முனைவர் க. ஜீவானந்தம்,உதவிப்பேராசிரியர் சிவப்பிரகாசம், செல்வி பெ.சுகாதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.