National Service Scheme organizes Programme on "MY Bharat Yuva Portal Enrollment." தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர் நாட்டு நலப்பணித்திட்ட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக முதலாமாண்டு நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்கான துவக்க விழா 08.12.2023 அன்று நண்பகல் 12 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின் இளையோர் அலுவலர் S.கீர்த்தனா அவர்கள் பங்குகொண்டு சிறப்பித்தார். அவர் தனது சிறப்புரையில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் அவசியத்தையும், அதன் மூலமாக மாணவர்கள் செய்ய வேண்டிய சேவைகளையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் கி. வரதராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்களும், துணை முதல்வர் முனைவர் .S. சிவகுமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர் இந்நிகழ்வில் முதலாம் ஆண்டினை சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் உதவிப்பேராசிரியர் கி.வில்லவனம், முனைவர் மு. தேவகி , முனைவர் க. ஜீவானந்தம்,உதவிப்பேராசிரியர் சிவப்பிரகாசம், செல்வி பெ.சுகாதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.