(27.09.2023)இன்று தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி பெரம்பலூர். நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக SHS கீழ் ஒரு பகுதியான மரக்கன்று நடும் விழாவை கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி அவர்கள் மற்றும் துணை முதல்வர் முனைவர் சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்து தத்தெடுக்கப்பட்ட செங்குனம் கிராமத்தில் உள்ள நித்திய ஜீவஒளி தேவாலயதில் 500 மரக்கன்று நடும் பணி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் உதவி பேராசிரியர் வில்லவனம், முனைவர் தேவகி, முனைவர் ஜீவானந்தம், உதவி பேராசிரியர் சிவப்பிரகாசம் அவர்கள் மரக்கன்று நடும் விழாவை ஒருங்கிணைத்தனர்.