PG and Research Department of Chemistry organizes One Day Hands-on training to clear NET,SET and TRB Examinations in chemistry. தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி -பெரம்பலூர் வேதியியல் துறை ஒரு நாள் சிறப்புப்பயிற்சிப் பட்டறை தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியில் வேதியியல் துறையின் சார்பில் ஒரு நாள் சிறப்புப் பயிற்சிப் பட்டறை "வேதியியல் துறையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி " என்ற தலைப்பின் கீழ் 22.02.2024 அன்று வியாழக்கிழமை,காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாக ஒலி, ஒளி அரங்கில் நடைபெற்றது. இப்பயிற்சிப்பட்டறையின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி, புனித வளனார் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் C.ராஜ ரத்தினம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.அவர் தனது சிறப்புரையில், 'வேதியியல் துறையின் சார்பில் நடைபெறும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டிய விதங்களைப் பற்றியும் இளநிலை, முதுநிலை பயிலும் மாணவர்கள் தற்போதைய போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் விதம் பற்றியும், அதற்கான நூல்களை தேர்வு செய்து படிக்க வேண்டிய விதம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். போட்டித்தேர்வின் மாதிரி படிவங்களை மாணவர்கள் எழுதியும் பயிற்சி எடுத்தனர்.நிகழ்வின் இறுதியில் மாணவர்களின் ஐயங்களைத் தெளிவு படுத்தினார். இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக்குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. ஜெயந்தி அவர்களும்,துணை முதல்வருமான முனைவர் S. சிவகுமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். வேதியியல் துறையின் தலைவர் முனைவர் T.பழனிச்சாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.உதவிப்பேராசிரியர் முனைவர் N.முருகானந்தம் அவர்கள் நன்றி நல்கினார்.உதவிப்பேராசிரியர் முனைவர் R.கோவிந்தராஜூ அவர்கள் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தார். இக்கருத்தரங்கில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.