PG & Research Department of Commerce organizes a Seminar on " Support for Entrepreneurs from Various Schemes ". தந்தை ஹேன்ஸ் ரோவர் (தன்னாட்சி)கல்லூரி -பெரம்பலூர் வணிகவியல் துறை -ஒரு நாள் சிறப்புக்கருத்தரங்கம் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் வணிகவியல்துறையின் சார்பில் 'தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் 11.07.2024 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாக ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கினார்.இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி, நபார்டு அமைப்பின் உதவி இயக்குனர் B. பிரபாகரன் அவர்கள் பங்குகொண்டு சிறப்பித்தார்.அவர் தனது சிறப்புரையில், 'புதிய தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். புதிதாக தொழில் தொடங்குவோர் செய்ய வேண்டிய அடிப்படை கருத்துக்களை தெளிவு படுத்தினார். தொழில் தொடங்குவோர் எந்தெந்த அமைப்புகளில் தன்னை தொடர்புபடுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.இறுதியில் மாணவர்கள் கேட்ட ஐயங்களுக்கு விளக்கம் கூறினார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்களும்,துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் கலையியல் புல முதன்மையர் முனைவர் K.மருததுரை அவர்களும்,அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வரவேற்புரையை வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் M.S. செந்தில்குமார் அவர்கள் வழங்கினார்.உதவிப்பேராசிரியர் முனைவர் P. தேவி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். நன்றியுரையை உதவிப்பேராசிரியர் முனைவர் M.தேவகி அவர்கள் நல்கினார்.இந்நிகழ்வில் அத்துறையைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தனர்.