Skill Development & Placement Cell organizes AGEAS Federal Life Insurance Co.Ltd., Coimbatore. For a Campus Drive Batch 2023-24. தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி பெரம்பலூர்-621220 (Skill Development and Placement Cell) திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பு தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரியின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பு (Skill Development and Placement Cell) மாணவர்்்களுக்கான வேலைவாய்ப்பிற்கான நேர்காணலை 04.03.2024 அன்று காலை 9.30 மணியிலிருந்து கல்லூரி வளாக ஒலி-ஒளி அரங்கத்தில் நடத்தியது. இந்த நிகழ்வை கோவையைச் சேர்ந்த AGEAS FEDERAL LIFE INSURANCE Co.Ltd என்ற கார்ப்பரேட் நிறுவனம் நடத்தியது .முதல் சுற்றில் எழுத்துத் தேர்வும் கலந்துரையாடலும் நடைபெற்றது .அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தனிநபருக்கான நேர்காணலும் நடைபெற்றது.182 பேர் கலந்து கொண்டதில் இறுதியில் 75 பேர் தேர்வாகி அந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை பெற்றனர்.AGEAS FEDERAL LIFE INSURANCE Co.Ltd கார்ப்பரேட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு இயக்குனர் திரு.சஹானா ராஜேந்திரன் அவர்கள் தலைமையிலான குழு வேலைவாய்ப்பிற்கான நேர்காணலை நடத்தியது. இந்நிகழ்வினை தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் கி. வரதராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுமதி பிராங்கிளின்,வணிக மேம்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் ஹபீஸுல்லா,மற்றும் தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கார்த்திக் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.