9750970183 office@roevercollege.ac.in
9750970183 office@roevercollege.ac.in

THANTHAI HANS ROEVER COLLEGE

(Autonomous)

(Affiliated to Bharathidasan University & Nationally Re-Accredited by NAAC)

ELAMBALUR (P.O), PERAMBALUR – 621 220

thanthai-hans-roever
thanthai-hans-roever

Voluntary Blood Donation Camp

event image

17/Aug/2023 - 17/Aug/2023

Voluntary Blood Donation Camp organized by YRC, NSS, NCC, ROTRACT CLUB & The Blood Bank, Government Head Quarters Hospital, Perambalur.     தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி பெரம்பலூர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய தன்னார்வ இரத்ததான முகாம் - 2023 தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சுருள் சங்கம், ரோட்டரி சங்கம் ஆகிய அமைப்புகள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து, 17.08.2023, வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாக ஒளி, ஒலி அரங்கில் தன்னார்வ இரத்ததான முகாமை நடத்தின. இந்த முகாமிற்குத் தந்தை ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை ஏற்றார். துணைத் தாளாளர் திரு.ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் முன்னிலை வகித்தார். அறிவியல் புல முதன்மையரும், துணை முதல்வருமான முனைவர் S.சிவக்குமார் அவர்களும், சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவர் சி.சரவணன் அவர்களும் பங்குகொண்டு வழி நடத்தினர். இந்த முகாமில் கல்லூரியின் பல்வேறு துறையைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்களும், பேராசிரியர்களும் தொண்டுள்ளத்தோடு பங்கு கொண்டு குருதி வழங்கி சிறப்பித்தனர். இந்த முகாமை கல்லூரியின் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர் வீ.தனலட்சுமி அவர்களும், முனைவர் சுந்தர்ராஜன் அவர்களும், முனைவர் சே.சுரேஷ் அவர்களும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் உதவிப்பேராசிரியர் வில்லவனம், முனைவர் மு.தேவகி, முனைவர் சார்லஸ் வின்சென்ட், முனைவர் ஜீவானந்தம், திரு.சிவப்பிரகாசம் ஆகியோரும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் திரு.P.பிரவீன் பெருமாள் அவர்களும், செஞ்சிருள் சங்கத்தின் திட்ட அலுவலர்கள் முனைவர் முருகானந்தம், முனைவர் கோவிந்தராஜன், ரோட்டரி சங்கத்தின் திட்ட அலுவலர்கள் முனைவர் கார்த்திக், உதவிப்பேராசிரியர் ஜீவா ஆகியோரும் ஒருங்கிணைத்தனர்.