Women Empowerment Cell organizes a one day seminar on " Women Empowerment in Law".
தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி-பெரம்பலூர்
பெண்கள் முன்னேற்ற அமைப்பு (WOMEN EMPOWERMENT CELL)
தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் பெண்கள் முன்னேற்ற அமைப்பின் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.இக்கருத்தரங்கு "பெண்கள் முன்னேற்ற சட்டம் "என்ற தலைப்பின் கீழ் 12.09.2024 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாக ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கினார். துணைத் தாளாளர் திரு. ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் வழக்கறிஞர் அரசுவாதி R.சந்தான லட்சுமி அவர்கள் பங்குகொண்டு சிறப்பித்தார்.அவர் தனது சிறப்புரையில், "பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள், அப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான சட்டங்கள், தற்போதைய பெண்ணுரிமைச் சட்டங்களின் வழிமுறைகள், சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது எங்ஙனம் என்பதை பற்றியும் தெளிவுபட எடுத்துக் கூறினார் கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் கலைப்புல முதன்மையர் முனைவர் K.மருததுரை அவர்களும், அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வரவேற்புரையை பெண்கள் முன்னேற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.தேவி அவர்கள் வழங்கினார். பெண்கள் முன்னேற்ற அமைப்பின் உறுப்பினர் உமா மகேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்கள் தங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டனர். அமைப்பின் உறுப்பினர் உதவிப் பேராசிரியர் சீலா ஜெரூசா அவர்கள் நன்றி நல்கினார்.இந்நிகழ்வில் பல்துறையைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பெண்கள் முன்னேற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் உறுப்பினர்களும் செய்திருந்தனர்