தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் 29.08.23 இன்று கல்லூரி வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. முகாமின் சிறப்பு விருந்தினராக, பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணியின் உதவி மாவட்ட அலுவலர் D.வீரபாகு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி சார்ந்த அலுவலர்கள் பேரிடர் காலங்களில் செய்ய வேண்டுவனவற்றை செயல் விளக்கமாகச் செய்து காட்டினர். இந்நிகழ்வில் ரோவர் கல்வி குழுமங்களின் தாளாளர் Dr K.வரதராஜன் அவர்கள் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். துணைத் தாளாளர் திரு ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் முன்னிலை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் M.ஜெயந்தி அவர்கள் துவக்க உரை யாற்றினார். துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்விற்கு இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் வீ.தனலட்சுமி வரவேற்புரை வழங்கினார். மாணவி நிஷாந்தினி நன்றி நல்கினார். 268 Yrc மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.